தமிழகத்தில் பொதுமுடக்கம் எதிரொலி: கேரள எல்லைகள் அடைப்பு

தமிழகத்தில் பொதுமுடக்கம் எதிரொலியாக தேனி மாவட்டத்திலிருந்து கேரளத்துக்கு செல்லும் குமுளி, கம்பம்மெட்டு மலைச்சாலைகள் அடைக்கப்பட்டது.
தமிழக கேரள எல்லையில் உள்ள குமுளி சோதனை சாவடி.
தமிழக கேரள எல்லையில் உள்ள குமுளி சோதனை சாவடி.


கம்பம்: தமிழகத்தில் பொதுமுடக்கம் எதிரொலியாக தேனி மாவட்டத்திலிருந்து கேரளத்துக்கு செல்லும் குமுளி, கம்பம்மெட்டு மலைச்சாலைகள் அடைக்கப்பட்டது.

தேனி மாவட்டத்திலிருந்து கேரளத்துக்கு செல்லும் மலைச்சாலைகளான குமுளி, கம்பம்மெட்டு பகுதிகளில் உள்ள சோதனைச்சாவடியில் தடை அமைக்கப்பட்டு வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது, மேலும் காய்கனி, பால் போன்ற அத்தியாவசிய பொருள்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டது.

கம்பம், கூடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் எந்த வாகனங்களும் இயங்கவில்லை, கடைகள், உழவர் சந்தை, தினசரி மார்க்கெட், இறைச்சி கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. அதே நேரத்தில் இறைச்சிகள் கடை உரிமையாளர்களின் வீட்டிலிருந்து டோர் டெலிவரி செய்யப்பட்டது. போலீசார் முக்கிய வீதிகள் வழியாக ரோந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com