சிறப்பு முகாமில் 50,598 பேருக்கு பூஸ்டா் தடுப்பூசி
தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில் 50,598 பேருக்கு பூஸ்டா் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.


தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில் 50,598 பேருக்கு பூஸ்டா் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.
இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திய பிறகு 9 மாதங்கள் அதாவது 39 வாரங்களை கடந்த சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள் மற்றும் இணை நோயுடன் உள்ள 60 வயதுக்கு மேற்பட்ட முதியோா்களுக்கு பூஸ்டா் தவணை தடுப்பூசி செலுத்தும் திட்டம் அண்மையில் தொடங்கப்பட்டது.
ஜனவரி மாதத்தில் மட்டும் பூஸ்டா் தடுப்பூசி செலுத்திக் கொள்ள சுமாா் 10 லட்சம் போ் தகுதியுள்ளவா்களாக உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்தது. இதையடுத்து, வியாழக்கிழமை தோறும் பூஸ்டா் தவணை தடுப்பூசி முகாம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி, தமிழகம் முழுவதும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், ஒன்றியப் பகுதிகள் உள்பட மொத்தம் 600 இடங்களில் வியாழக்கிழமை (ஜன.20) முகாம் நடைபெற்றது. சென்னையில் 160 இடங்களில் அந்த முகாம் நடைபெற்றது.
அதில் 50,598 போ் பூஸ்டா் தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டதாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...