ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

பூண்டி ஏரியில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் சடலம் மீட்பு

திருவள்ளூர் அருகே ஏரியில் மீன் பிடிக்கச் சென்ற மீனவரை தீயணைப்பு துறையினர் தீவிரமாக போராடி ஏரிக்குள் 2 கி.மீ தூரத்தில் சகதிக்குள் சிக்கிய நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் சடலமாக மீட்டனர்.

News image
மீனவர் விஜயன்
Updated On :23 ஜனவரி 2022, 6:15 am

DIN

 
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே ஏரியில் மீன் பிடிக்கச் சென்ற மீனவரை தீயணைப்பு துறையினர் தீவிரமாக போராடி ஏரிக்குள் 2 கி.மீ தூரத்தில் சகதிக்குள் சிக்கிய நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் சடலமாக மீட்டனர்.

திருவள்ளூர் அருகே பூண்டி ஏரிக்கரையோரம் கொழுந்தலூர் கிராமத்தை சேர்ந்த ஏழுமலையின் மகன் விஜயன் (30). இவருக்கு எஸ்தர் என்ற மனைவியும் குகன் (7) என்ற மகனும், சுப்ரியா (5) என்ற மகளும் உள்ளனர். இவர் மீன் பிடிக்கும் தொழில் செய்து வந்தார். 

இந்த நிலையில் விஜயன் வழக்கம் போல் சனிக்கிழமை பூண்டி ஏரியில் படகில் மீன்பிடிக்க சென்றார். அப்போது, அவரது மனைவி வழக்கம்போல வழி அனுப்பி வைத்தாராம். 

இந்த நிலையில் வழக்கமாக 9 மணி அளவில் வீடு திரும்பும் விஜயன், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லையாம். இதனால் பூண்டி ஏரியில் அவரது உறவினர்கள் வந்து பார்த்தனர். அப்போது படகு மட்டும் மிதந்து கொண்டிருந்த நிலையில் விஜயன் மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

இது தொடர்பாக புல்லரம்பாக்கம் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதைத் தொடர்ந்து போலீஸாரும், தீயணைப்பு துறையினர் 10-க்கும் மேற்பட்டோர் மாயமான விஜயனை பூண்டி ஏரியில் படகு மூலம் சனிக்கிழமை இரவு வரையில் தீவிரமாக தேடினர். அதைத் தொடர்ந்து நேரமானதால் கண்டுபிடிக்க முடியாத நிலையேற்பட்டது.

அதேபோல், மீண்டும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் மீனவர் விஜயனை தீயணைப்பு துறையினர் தேடினர். அப்போது சம்பவ இடத்திலிருந்து 2 கி.மீ தூரத்தில் சகதியில் சிக்கிய நிலையில் மீனவரின் சடலத்தை மீட்டனர். பின்னர் இது தொடர்பாக புல்லரம்பாக்கம் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து மீனவரின் சடலத்தை கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த நிலையில் ஏரிக்குள் மீன் பிடிக்கச் சென்று மீனவ இளைஞர் உயிரிழந்த சம்பவம் அந்த கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.