
அன்பில் மகேஷ் பொய்யாமொழி (கோப்புப் படம்)
சென்னை: தமிழகத்தில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்திருப்பதன் காரணமாக, பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், பிப்ரவரியில் பள்ளிகள் திறக்கப்படுமா என்பது குறித்து தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
கரோனா தொற்றின் மூன்றாவது அலை காரணமாக, தமிழகத்தில் புத்தாண்டுக்கு முன்பே ஒன்று முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு, ஆன்லைன் முறையில் பாடம் நடத்த உத்தரவிடப்பட்டிருந்தது.
இதையும் படிக்க.. உத்தரகண்ட் தொப்பி, மணிப்பூர் துண்டு அணிந்து வந்த பிரதமர் மோடி
பொதுத் தேர்வு எழுதும் 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு மட்டும் சுழற்சியில் முறையில் பள்ளிகள் செயல்பட்டு வந்தன. ஆனால், கரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்ததால், பொங்கல் பண்டிகைக்கு அளிக்கப்பட்ட விடுமுறை நீட்டிக்கப்பட்டு, ஜனவரி 13 வரை பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்த அறிவுறுத்தப்பட்டன.
இந்த நிலையில், கடந்த வாரம் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், இந்த கல்வியாண்டில் நிச்சயம் பொதுத் தேர்வு நடைபெறும் என்று அறிவித்திருந்தார்.
இதற்கிடையே, பொதுத் தேர்வு நெருங்கும் நிலையில், கரோனா பாதிப்பு குறையாமல் இருந்தாலும், வரும் பிப்ரவரி மாதத்தில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளைத் திறப்பதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பொதுத் தேர்வுக்கான வினாத்தாள் வடிவமைப்பில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...