வெங்கைய நாயுடுவுக்கு ஸ்டாலின் பரிசளித்த நூல் எது?

குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடுவின் பிறந்த நாளையொட்டி,  ஆளுநர் மாளிகையில் அவரைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்த முதல்வர் மு.க. ஸ்டாலின் அவருக்குப் பரிசளித்த நூலைப் பற்றி...
வெங்கைய நாயுடுவுக்கு ஸ்டாலின் பரிசளித்த நூல் எது?

குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடுவின் பிறந்த நாளையொட்டி,  ஆளுநர் மாளிகையில் அவரைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்த முதல்வர் மு.க. ஸ்டாலின் அவருக்குப் பரிசளித்த நூல் எது?

சாமானியர் ஆட்சி - திமுகவும் தமிழகத்தில் அரசியல் உருவாக்கங்களும், 1949 -  1967 (Rule of the Commoner - DMK and Formations of the Political in Tamil Nadu, 1949–1967).

ஆங்கிலத்தில் இந்த நூலை ராஜன் குறை கிருஷ்ணன் (டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பல்கலை., தில்லி), ரவீந்திரன் ஸ்ரீராமச்சந்திரன் (அசோகா பல்கலை., சோனிபேட்),  விஎம்எஸ் சுபகுணராஜன் ஆகியோர் எழுதியுள்ளனர்.

நாடு விடுதலை பெற்ற சில ஆண்டுகளிலேயே தொடங்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம், எவ்வாறு வலுப்பெற்று, மக்கள் செல்வாக்குடன் 1967-ல் தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது என்பது வரையிலான அரசியலை, தமிழகச் சூழலைப் பேசுகிறது இந்த நூல்.

கேம்பிரிட்ஜ் யுனிவர்சிடி பிரஸ் வெளியிட்ட இந்த நூலின் விலை ரூ. 895.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com