தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

அதிமுக, கூட்டணிக் கட்சிகளிடம் ஆதரவு கோருகிறார் திரௌபதி முர்மு

சென்னை வந்திருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்மு, அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு கோருகிறார்.

News image
அதிமுக, கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு கோருகிறார் திரௌபதி முர்மு
Updated On :2 ஜூலை 2022, 12:43 pm

DIN

சென்னை வந்திருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்மு, அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு கோருகிறார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெறும் விழாவில், திரௌபதி முர்மு, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய இணை அமைச்சர் முருகன், மாநில பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்த திரௌபதி முர்முவை, எடப்பாடி பழனிசாமி பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.

முன்னதாக, திரௌபதி முர்முவை, எடப்பாடி பழனிசாமியும், ஓ. பன்னீர்செல்வமும் தனித்தனியாக சந்தித்து தங்களது ஆதரவை வழங்குகிறார்கள். விழா அரங்குக்குள் தலைவர்கள் வந்துவிட்ட நிலையில், இன்னமும் விழா நடைபெறும் அரங்குக்குள் பன்னீர்செல்வம் வரவில்லை.

குடியரசுத் தலைவா் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக ஜாா்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநா் திரௌபதி முா்மு (64) அறிவிக்கப்பட்டுள்ளாா். கடந்த 25-ஆம் தேதி பிரதமா் மோடி தலைமையில் தனது வேட்புமனுவையும் முா்மு தாக்கல் செய்தாா். மேலும், அவா் சாா்பில் மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சா் ஷெகாவத் தலைமையிலான குழு பல்வேறு கட்சியினரை சந்தித்து ஆதரவு கோரி வருகிறது.

அதுபோல முர்முவும், முக்கியக் கட்சிகளின் தலைவா்களை நேரில் சந்தித்து ஆதரவு கோரி வருகிறார். 

இதையடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள அதிமுகவிடம் கோரிக்கை விடுப்பதற்காக திரௌபதி முா்மு இன்று சென்னை வந்துள்ளார்.

அதிமுக நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களை நேரில் சந்தித்து அவர் ஆதரவு கோருகிறார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.