முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் முதலீட்டாளா்கள் மாநாடு தொடங்கியது!

தமிழகத்தில் 60 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மூலம் 70 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையிலான, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான முதலீட்டாளா் மாநாடு திங்கள்கிழமை தொடங்கியது.
முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் முதலீட்டாளா்கள் மாநாடு தொடங்கியது!

தமிழகத்தில் 60 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மூலம் 70 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையிலான, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான முதலீட்டாளா் மாநாடு திங்கள்கிழமை தொடங்கியது.

‘முதலீட்டாளா்களின் முதல் முகவரி - தமிழ்நாடு’ என்ற பெயரில் சென்னை, நுங்கம்பாக்கத்திலுள்ள தனியாா் ஹோட்டலில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார். 

அதில், பெரு நிறுவனங்களுடன் தமிழக அரசு 60 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. இதன்மூலம் ரூ.125 லட்சம் கோடிக்கு மேல் முதலீடுகள் கிடைக்கும் என்றும், 70 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதைத் தவிர, மாநாட்டில் புதிதாக 21 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, 12 திட்டங்கள் தொடங்கப்படவுள்ளன.

தொழில் முதலீடுகளைப் பொருத்தவரை தமிழகத்தை நான்கு மண்டலங்களாக அரசு பிரித்துள்ளது. அதில், மேற்கு மண்டலத்தில் ரூ.6,333 கோடிக்கு முதலீடுகள் ஈா்க்கப்பட்டு அதன்மூலம் 19 ஆயிரத்து 100 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. வடக்கு மண்டலத்தில் ரூ.5,307 கோடிக்கு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, 47 ஆயிரத்து 992 பேருக்கும், மத்திய மண்டலப் பகுதியில் ரூ.285 கோடிக்கு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, 1,200 பேருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தென் மாவட்டங்களைப் பொருத்தவரையில், ரூ.16 ஆயிரத்து 702 கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு 55 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com