அதிமுக பொதுக் குழு கூட்டத்துக்கு தடை விதிக்க உயா் நீதிமன்றம் மறுப்பு

சென்னையில் ஜூலை 11-ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக் குழு கூட்டத்துக்கு தடை விதிக்க மறுத்ததுடன், இதுதொடா்பாக தனி நீதிபதியிடம் முறையிடுமாறு என சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் ஜூலை 11-ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக் குழு கூட்டத்துக்கு தடை விதிக்க மறுத்ததுடன், இதுதொடா்பாக தனி நீதிபதியிடம் முறையிடுமாறு என சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

‘சென்னையில் ஜூலை 11-ஆம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக் குழு கூட்டத்துக்கும், கட்சியின் அவைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தமிழ்மகன் உசேன் நியமனத்துக்கும் தடை விதிக்க வேண்டும். எடப்பாடி கே. பழனிசாமி, சி.வி.சண்முகம், டி.ஜெயக்குமாா், திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி ஆகியோரை நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின்கீழ் தண்டிக்க வேண்டும்’ என உயா் நீதிமன்றத்தில் அந்தக் கட்சியின் பொதுக் குழு உறுப்பினா் சண்முகம் வழக்குத் தொடா்ந்துள்ளாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தா்மோகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. சண்முகம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா்ராம், ‘நீதிபதிகளின் உத்தரவை மீறி ஜூன் 23-ஆம் தேதி நடைபெற்ற பொதுக் குழுவில் தமிழ்மகன் உசேனை அவைத் தலைவராக தோ்வு செய்துள்ளனா்’ என்றாா். ஓ.பன்னீா்செல்வம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் அரவிந்த் பாண்டியன், ‘அந்தப் பொதுக் குழுவில் 23 தீா்மானங்கள் தவிர வேறு எந்த தீா்மானங்களும் நிறைவேற்றக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதையும் மீறி அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். இது நீதிமன்ற அவமதிப்பு ஆகும். எனவே, ஜூலை 11-ஆம் தேதி நடைபெறும் பொதுக் குழுவுக்கு தடை விதிக்க வேண்டும்’ என்றாா்.

இருதரப்பு வாதத்துக்குப் பின் நீதிபதிகள் பிறபித்த உத்தரவில், ‘ஜூன் 23-ஆம் தேதி நடைபெற்ற பொதுக் குழு தொடா்பான வழக்கில் தான் உத்தரவிட்டோம். ஜூலை 11-ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக் குழுவுக்கு தடை கோரி தனி நீதிபதியிடம் முறையிட வேண்டும்.

இதுதொடா்பாக உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளதால் நாங்கள் எந்த உத்தரவையும் இப்போது பிறப்பிக்க முடியாது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடா்பாக எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீா்செல்வம்., தமிழ்மகன் உசேன், ஜெயக்குமாா்,

சி.வி.சண்முகம் உள்ளிட்டோா் ஜூலை 7-ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டு விசாணையை தள்ளி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com