
செங்கல்பட்டு அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் 6 பேர் பலியானது வேதனை அளிக்கிறது என பிரதமர் நரேந்திர தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
திருச்சி நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து சிதம்பரம் நகருக்கு சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து, செங்கல்பட்டு அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியதில் பேருந்தில் பயணித்த ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்துக்குள்ளான பேருந்தின் சிதைந்து போன முன்பகுதி
இதையும் படிக்க | ஷின்சோ அபே மீதான தாக்குதல்: பிரதமர் மோடி வேதனை
இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் அலுவலக ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "செங்கல்பட்டில் நடந்த பேருந்து விபத்தில் 6 பேர் பலியானது வேதனை அளிக்கிறது. எனது எண்ணங்கள் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுடன் தான் உள்ளது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | சுடப்பட்டார் ஜப்பான் முன்னாள் பிரதமர் அபே - செய்திப் படங்கள்
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G