தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 10) தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் கடந்த சில நாள்களாக கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மாநில அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் தமிழகம் முழுவதும் மீண்டும் கரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகின்றன. தடுப்பூசி போடாதவர்கள், தவணை தடுப்பூசி போடாதவர்கள் இந்த முகாம்களை பயன்படுத்தி எளிதாக தடுப்பூசி செலுத்திக்கொள்லலாம்.
தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் நிறைவடைந்தவா்களுக்கு பூஸ்டா் தவணை தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
தமிழகத்தில் அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி செலுத்த வாரம் தோறும் சனிக்கிழமைகளில் 50 ஆயிரம் இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
அதைத் தொடா்ந்து, ஒரு லட்சம் இடங்களில் சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கடந்த மே 8-ஆம் தேதி, கடந்த ஜூன் 12-ஆம் தேதி தமிழகம் முழுவதும் அத்தகைய முகாம்கள் நடைபெற்றன.
இந்த நிலையில், 31-ஆவது சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் ஒரு லட்சம் இடங்களில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.