சென்னை: சென்னை வானகரத்தில் நடைபெற்று வரும் அதிமுக பொதுக்குழுவில், ஓ. பன்னீர்செல்வத்தை கட்சியிலிருந்து நீக்க சிறப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.
கட்சியின் பொதுக்குழுவுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த பொருளாளர் ஓ. பன்னீர்செல்வத்தின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் பொதுக்குழுவில் பேசிய நத்தம் விஸ்வநாதன் கூறினார்.
இதையும் படிக்க.. போர்க்களம் போல் காட்சியளிக்கும் அதிமுக தலைமை அலுவலகம் (விடியோ)
மேலும், ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அனைவரையும் அதிமுகவிலிருந்து நீக்க சிறப்புத் தீர்மானம் கொண்டு வரப்படுவதாகவும் அறிவித்தார்.

கட்சி விதிகள் மற்றும் கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்ட ஓ. பன்னீர்செல்வம் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் வகையில் நத்தம் விஸ்வநாதன் கொண்டு வந்த சிறப்பு தீர்மானம் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டது.
இதையும் படிக்க.. அதிமுக பொதுச் செயலாளர் பதவி குறித்த விதி ஒட்டுமொத்தமாக ரத்தானது
ஓ. பன்னீர்செல்வம் திமுகவுடன் நட்பு பாராட்டியது மற்றும் ஆட்சியைப் பாராட்டியது அனைத்தும் கட்சியின் விதிகளுக்கு முரணானது. பொருளாளர், அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஓ. பன்னீர்செல்வம் நீக்கப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஓ. பன்னீர்செல்வத்துடன் வைத்திலிங்கம், ஜெசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோரையும் அதிமுகவிலிருந்து நீக்கி சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சேலம் வழியாக சென்னை - கொல்லம் இடையே சிறப்பு ரயில்

சேலம் வழியாக கேரளம் சென்ற ரயிலில் கடத்தப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல்

குமாரபாளையம் ஜவுளி பூங்காவில் தீ விபத்து: ரூ. 30 லட்சம் பொருள்கள் சேதம்

புதுக்கோட்டை அரசு மகளிா் கல்லூரியில் அடிப்படை வசதிகள்: அமைச்சா் உறுதி
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



