அதிமுக பொதுச் செயலாளர் பதவி குறித்த விதி ஒட்டுமொத்தமாக ரத்தானது

வானகரத்தில் நடைபெற்று வரும் அதிமுக பொதுக்குழுவில், அதிமுக பொதுச் செயலாளர் பதவி குறித்த விதி ஒட்டுமொத்தமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் பதவி குறித்த விதி ஒட்டுமொத்தமாக ரத்தானது
அதிமுக பொதுச் செயலாளர் பதவி குறித்த விதி ஒட்டுமொத்தமாக ரத்தானது


அதிமுக பொதுக்குழுவை நடத்த சென்னை உயா் நீதிமன்றம் இன்று காலை அனுமதி வழங்கி தீர்ப்பளித்த நிலையில், வானகரத்தில் நடைபெற்று வரும் அதிமுக பொதுக்குழுவில், அதிமுக பொதுச் செயலாளர் பதவி குறித்த விதி ஒட்டுமொத்தமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டு, ஓ. பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் பதவிஏற்றுக் கொண்டனர்.

அப்போது கட்சியின் பொதுச்செயலாளர் குறித்து அதிமுக சட்ட விதி 20ல், கட்சி உறுப்பினர்களும், நிர்வாகிகளும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டபடி ஜெயலலிதா அவர்கள், கட்சியின் நிரந்தரப் பொதுச் செயலாளராகப் போற்றப்படுவார். அவர் வகித்த பொதுச் செயலாளர் பொறுப்பிற்கு இனி யாரும் தேர்நதெடுக்கப்படவோ அல்லது நியமிக்கப்படவோ மாட்டார்கள் என்ற விதி உருவாக்கப்பட்டது.

இன்று நடைபெற்ற பொதுக்குழுவில் பல்வேறு சட்ட விதிகள் திருத்தி அமைக்கப்பட்டுள்ளன. அதில், இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமிக்கும் வகையில், இந்த சட்ட விதி 20 முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிக்க.. அதிமுகவிலிருந்து ஓ. பன்னீர்செல்வம் நீக்கம்: சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றம்

அதற்கு பதிலாக, அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பொறுப்பு உருவாக்கப்படுகிறது. சட்டதிட்ட விதிகளின்படி கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளரை தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படிதான். அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com