ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்கம் சார்பில் தமிழக அரசு வலியுறுத்தி கோரிக்கைகளை முன்வைத்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. 
ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்கம் சார்பில் தமிழக அரசு வலியுறுத்தி கோரிக்கைகளை முன்வைத்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

மருத்துவ காப்பீடு திட்ட குறைபாடுகளை கலைந்திடவும் தேர்தல் வாக்குறுதியின் படி 70 வயதான ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் உயர்வு அளித்திடவும் மூன்று சதவீத அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்கிடவும், குடும்ப நல நிதியை உடனுக்குடன் அளித்திடவும், புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு பழைய திட்டத்தைத் தொடரவும் விருதுநகர் மாவட்ட ஓய்வூதியர் குறைபாடுகளைக் கலைந்திடவும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கி. கதிர்வேல் தலைமை தாங்கினார்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வெ.முருகன் வரவேற்றார். மாவட்ட துணைத் தலைவர்கள் சுகந்தி, குணசேகரி, தட்சிணாமூர்த்தி, அருள் பிரகாசம், மாவட்டத் துணைச் செயலாளர் கள் அம்சவல்லி, மூர்த்தி ராமசேஷன், முத்துக்குமாரசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட குழு உறுப்பினர் ஆ.விஜய் குமார் தொடக்கி வைத்துப் பேசினார்.  

மாவட்டச் செயலாளர் கெ.நாராயணசாமி, மாவட்டச் செயலாளர் மு.சீனிவாசன், ப.பன்னீர்செல்வம், வட்ட செயலாளர்கள் செங்கை ஆத்மநாதன், மதுராந்தகம் ரங்கநாதன், தாம்பரம் கருப்பையா, திருக்கழுக்குன்றம் வட்டத் தலைவர் வீரராகவன், மாநிலக் குழு உறுப்பினர் மா.ச. முனுசாமி, மான்சிங் உள்ளிட்ட பலர் கோரிக்கையை உரையாற்றினர். மாவட்ட பொருளாளர் பழனிசாமி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com