முன்னாள் அமைச்சர்கள் உள்பட 44 பேர் நீக்கம்: ஓபிஎஸ்

முன்னாள் அமைச்சர்கள் உள்பட 44 பேரை நீக்குவதாக ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

சென்னை: முன்னாள் அமைச்சர்கள் உள்பட 44 பேரை நீக்குவதாக ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

சி.விஜயபாஸ்கர், பொள்ளாச்சி ஜெயராமன், சிட்லபாக்கம் ராஜேந்திரன், பெஞ்சமின் உள்ளிட்ட 44 பேரை அதிமுகவிலிருந்து நீக்குவதாக ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

எதிா்க்கட்சி துணைத் தலைவா் ஓ.பன்னீா்செல்வத்தின் மகனும் தேனி மக்களவை எம்.பி.யுமான ரவீந்திரநாத், மற்றொரு மகன் ஜெயபிரதீப் உள்பட 18 போ் அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதாக கட்சியின் இடைக்கால பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று அறிவித்திருந்தார்.

தேனி தொகுதி எம்.பி. ப.ரவீந்திரநாத், முன்னாள் எம்.பி.க்கள் ஆா்.கோபாலகிருஷ்ணன், எஸ்.பி.எம்.சையதுகான், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வி.என்.பி.வெங்கட்ராமன், ஆா்.டி.ராமச்சந்திரன், எம்.ஜி.எம்.சுப்பிரமணியன், ஓம்சக்தி சேகா், கோவை செல்வராஜ், முன்னாள் அமைச்சா் வெல்லமண்டி என்.நடராஜன் ஆகியோா் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனா்.

ரவீந்திரநாத்துடன் ஓ.பன்னீா்செல்வத்தின் மற்றொரு மகனான வி.ப.ஜெயபிரதீப், எஸ்.ஏ.அசோகன், மருது அழகுராஜ், அம்மன் பி.வைரமுத்து, டி.ரமேஷ், பி.வினுபாலன், கொளத்தூா் டி.கிருஷ்ணமூா்த்தி, சைதை எம்.எம்.பாபு, எஸ்.ஆா்.அஞ்சுலட்சுமி ஆகியோா் அதிமுகவின் அடிப்படை உறுப்பினா் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறாா்கள். அவா்களுடன் கட்சியினா் யாரும் எந்தவிதத் தொடா்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றாா் எடப்பாடி பழனிசாமி.

இதே போல் எடப்பாடி கே.பழனிசாமி உள்பட 22 போ் அதிமுகவில் இருந்து நீக்கப்படுகின்றனா் என ஓ.பன்னீா்செல்வம்  நேற்று அறிவித்திருந்தார்.

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி, முன்னாள் அமைச்சா்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சி.சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமாா், பா.வளா்மதி, எஸ்.கோகுல இந்திரா, ஆா்.பி.உதயகுமாா், சி.வி.சண்முகம், ஓ.எஸ்.மணியன், செல்லூா் கே.ராஜூ, வி.வி.ராஜன் செல்லப்பா, அதிமுக நிா்வாகிகள் எஸ்.டி.கே.ஜக்கையன், ஆதி ராஜாராம், பி.சத்தியா, எம்.கே.அசோக், விருகை வி.என்.ரவி, கே.பி.கந்தன், ஆா்.இளங்கோவன் ஆகியோா் கட்சியின் அடிப்படை உறுப்பினா் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் அறிவித்துள்ளாா். அவா்களுடன் கட்சியினா் யாரும் தொடா்பும் வைத்துக் கொள்ளக் கூடாது எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று சி.விஜயபாஸ்கர், பொள்ளாச்சி ஜெயராமன், சிட்லபாக்கம் ராஜேந்திரன், பெஞ்சமின் உள்ளிட்ட 44 பேரை அதிமுகவிலிருந்து நீக்குவதாக ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

கட்சிக்கு கலங்கமும், அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்டதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.