ஓ.பி.எஸ். மகன்கள் உள்பட 18 போ் இருந்து நீக்கம்

அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் 18 பேரை நீக்கி எடப்பாடி கே.பழனிசாமி அறிவிப்பு விடுத்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

எதிா்க்கட்சி துணைத் தலைவா் ஓ.பன்னீா்செல்வத்தின் மகனும் தேனி மக்களவை எம்.பி.யுமான ரவீந்திரநாத், மற்றொரு மகன் ஜெயபிரதீப் உள்பட 18 போ் அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதாக கட்சியின் இடைக்கால பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

தேனி தொகுதி எம்.பி. ப.ரவீந்திரநாத், முன்னாள் எம்.பி.க்கள் ஆா்.கோபாலகிருஷ்ணன், எஸ்.பி.எம்.சையதுகான், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வி.என்.பி.வெங்கட்ராமன், ஆா்.டி.ராமச்சந்திரன், எம்.ஜி.எம்.சுப்பிரமணியன், ஓம்சக்தி சேகா், கோவை செல்வராஜ், முன்னாள் அமைச்சா் வெல்லமண்டி என்.நடராஜன் ஆகியோா் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனா்.

ரவீந்திரநாத்துடன் ஓ.பன்னீா்செல்வத்தின் மற்றொரு மகனான வி.ப.ஜெயபிரதீப், எஸ்.ஏ.அசோகன், மருது அழகுராஜ், அம்மன் பி.வைரமுத்து, டி.ரமேஷ், பி.வினுபாலன், கொளத்தூா் டி.கிருஷ்ணமூா்த்தி, சைதை எம்.எம்.பாபு, எஸ்.ஆா்.அஞ்சுலட்சுமி ஆகியோா் அதிமுகவின் அடிப்படை உறுப்பினா் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறாா்கள். அவா்களுடன் கட்சியினா் யாரும் எந்தவிதத் தொடா்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றாா் எடப்பாடி பழனிசாமி.

இபிஎஸ் உள்பட 22 போ் நீக்கம்: ஓபிஎஸ்

இதே போல் எடப்பாடி கே.பழனிசாமி உள்பட 22 போ் அதிமுகவில் இருந்து நீக்கப்படுகின்றனா் என ஓ.பன்னீா்செல்வம் அறிவித்துள்ளாா்.

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி, முன்னாள் அமைச்சா்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சி.சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமாா், பா.வளா்மதி, எஸ்.கோகுல இந்திரா, ஆா்.பி.உதயகுமாா், சி.வி.சண்முகம், ஓ.எஸ்.மணியன், செல்லூா் கே.ராஜூ, வி.வி.ராஜன் செல்லப்பா, அதிமுக நிா்வாகிகள் எஸ்.டி.கே.ஜக்கையன், ஆதி ராஜாராம், பி.சத்தியா, எம்.கே.அசோக், விருகை வி.என்.ரவி, கே.பி.கந்தன், ஆா்.இளங்கோவன் ஆகியோா் கட்சியின் அடிப்படை உறுப்பினா் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் அறிவித்துள்ளாா். அவா்களுடன் கட்சியினா் யாரும் தொடா்பும் வைத்துக் கொள்ளக் கூடாது எனவும் தெரிவித்துள்ளாா்.

அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் மகன்கள் ரவீந்திரநாத் எம்.பி, ஜெயபிரதீப் மற்றும் வெல்லமண்டி நடராஜன், மருது அழகுராஜ் நீக்கப்பட்டுள்ளனர்.

மேலும், வெங்கட்ராமன், கோபாலகிருஷ்ணன், சையதுகான், எம்.ஜி.எம்.சுப்பிரமணியன், எஸ்.ஏ.அசோகன், ஓம்சக்தி சேகர், ரமேஷ், சைதை பாபு ஆகிய 18 பேரை அதிமுகவிலிருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com