நீதி கிடைக்குமா என்பது இறைவனுக்குதான் தெரியும்: மாணவியின் தாயார்

எனது மகள் ஸ்ரீமதி மரணத்திற்கு நீதி கிடைக்குமா என்பது இறைவனுக்குதான் தெரியும் என்று மாணவியின் தாயார் உருக்கமாக தெரிவித்தார். 
கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர் பொதுமக்கள்.
கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர் பொதுமக்கள்.

எனது மகள் ஸ்ரீமதி மரணத்திற்கு நீதி கிடைக்குமா என்பது இறைவனுக்குதான் தெரியும் என்று மாணவியின் தாயார் உருக்கமாக தெரிவித்தார். 

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி மர்மான முறையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் மாணவியின் உறவினர்கள் கடந்த 5 நாள்களாக அமைதியான முறையில் போரட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை போராட்டத்திற்கு அதிக அளவிலான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டதைத் தொடர்ந்து, போராட்டக்காரர்கள் பள்ளி மீது கற்களை வீசி சூறையாடினர். 

போராட்டக்காரர்களை தடுக்க முயன்றபோது, காவலர்கள் மீதும் போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கியதில் விழுப்புரம் சரக காவல் துறை துணைத் தலைவர் பாண்டியன் உள்பட 20 பேர் படுகாயமடைந்தனர். மேலும், பள்ளி வாகனங்களை அடித்து நொறுக்கி தீயிட்டு எடித்தனர். சாலையோரம் இருந்த காவல் துறை வாகனத்திற்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. 

இந்த நிலையில் பள்ளியில் நிகழ்ந்த வன்முறையில் டிஐஜி மற்றும் எஸ்பி உள்ளிட்ட 55 காவலர்கள் காயம் அடைந்துள்ளனர்.  இது தொடர்பாக இதுவரை 70 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

இந்நிலையில், பள்ளியில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக உள்துறை செயலர் பணீந்திர ரெட்டி, தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு நேரில் ஆய்வு செய்தனர். 

ஆய்வுக்கு பின்னர், மாணவி மரணம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படுள்ளதாக காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு தெரிவித்தார். 

மாணவியின் மரணம் தொடர்பாக அந்த பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி மற்றும் முதல்வர் சிவசங்கரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறினார். 

இந்நிலையில், செய்தியாளர்களிடம் மாணவி ஸ்ரீமதியின் தாயார் கூறுகையில், எனது மகள் ஸ்ரீமதி மரணத்திற்கு நீதி கிடைக்குமா என்பது இறைவனுக்குதான் தெரியும். 

பள்ளியில் நிகழ்ந்த வன்முறைக்கு மாணவர் சங்கம் காரணமல்ல. பள்ளியின் முன்பகையாளர்கள் அல்லது அவர்கள் ஏற்பாடு செய்து வைத்திருந்த ஆள்களே காரணமாக இருக்கலாம் என தெரிவித்தார்.

மேலும், வன்முறையை கைவிட்டு அமைதி வழியில் போராட வேண்டும் என்றும், அமைதியான முறையிலேயே நீதியை பெற விரும்புவதாக போராட்டக்கரார்களுக்கு மாணவியின் தாயார் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com