குடியரசுத் தலைவர் தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்

குடியரசுத் தலைவர் தேர்தலில் சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார். 
குடியரசுத் தலைவர் தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்

குடியரசுத் தலைவர் தேர்தலில் சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார். 

நாட்டின் 15-ஆவது குடியரசுத் தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் திங்கள்கிழமை (ஜூலை 18) நடைபெறுகிறது. அதில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களும், எம்எல்ஏ-க்களும் வாக்களிக்க உள்ளனா். 

எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் தில்லி செல்ல முடியாத நிலையில், மாநிலங்களில் உள்ள தலைமைச் செயலகங்களில் தேர்தல் நடைபெறுகிறது. 

அதன்படி சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இன்று காலை 10 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் நேரிடியாக அவர் சென்னை தலைமைச் செயலக வாக்குப்பதிவு மையத்திற்கு வந்து வாக்களித்துள்ளார். 

தொடர்ந்து, சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களிக்க வருகை தந்திருக்கின்றனர். 

காலை 10 மணிக்கு தொடங்கியுள்ள வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. தோ்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 21-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

கரோனா பரவல் தடுப்பு விதிகளைப் பின்பற்றி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதாகத் தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com