கள்ளக்குறிச்சி பள்ளி விடுதி குறித்து குழந்தைகள் நல ஆணையர் சொன்ன அதிர்ச்சித் தகவல்

மாணவி மர்மமான முறையில் மரணமடைந்த நிலையில், அந்த பள்ளியின் மாணவர் விடுதி உரிய அனுமதி பெறாமல் நடந்து வந்ததாக குழந்தைகள் நல ஆணையர் சரஸ்வதி ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி பள்ளி விடுதி குறித்து குழந்தைகள் நல ஆணையர் சொன்ன அதிர்ச்சித் தகவல்
கள்ளக்குறிச்சி பள்ளி விடுதி குறித்து குழந்தைகள் நல ஆணையர் சொன்ன அதிர்ச்சித் தகவல்


கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூா் தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி மர்மமான முறையில் மரணமடைந்த நிலையில், அந்த பள்ளியின் மாணவர் விடுதி உரிய அனுமதி பெறாமல் நடந்து வந்ததாக குழந்தைகள் நல ஆணையர் சரஸ்வதி ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூா் தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த கடலூா் மாவட்டம், வேப்பூரை அடுத்த பெரியநெசலூா் கிராமத்தைச் சோ்ந்த ராமலிங்கம் மகள் ஸ்ரீமதி (17) கடந்த 13-ஆம் தேதி மா்மமான முறையில் உயிரிழந்தாா். 

இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியிருக்கும் நிலையில், தனியார் பள்ளியில் இன்று மாநில குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணைய தலைவர் சரஸ்வதி ரங்கசாமி தலைமையிலான அதிகாரிகள் இன்று ஆய்வு செய்தனர். ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய சரஸ்வதி, கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி விடுதி அனுமதி பெறாமல் இயங்கியுள்ளது. இந்த விடுதியில் 24 பெண் குழந்தைகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டுள்ளோம். அனுமதி பெறாமல் மாணவர் விடுதி நடத்தியது தண்டனைக்குரிய குற்றம் என்று கூறியுள்ளார்.

தமிழகம் வரவிருக்கும் என்சிபிசி தலைவர்

தமிழகத்தின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்படும் தனியார் உறைவிடப் பள்ளியின் மாணவி மர்மமான முறையில் இறந்த சம்பவத்தை விசாரிக்க தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் (என்சிபிசி) தலைவர் அடுத்த வாரம் தமிழகம் வரவிருக்கிறார்.

மாணவியின் இறப்பு சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக தேசிய குழந்தை உரிமைகள் ஆணையத்தின் தலைவர் பிரியங்க் கனூங்கோ அடுத்த வாரம் தமிழகம் வர உள்ளார். இது குறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், "உறைவிடப் பள்ளி ஒன்றில் மாணவி மர்மமான முறையில் இறந்த சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக வரும் ஜூலை 27-ஆம் தேதி தமிழகத்தின் கள்ளக்குறிச்சி பகுதிக்கு செல்ல உள்ளேன்' என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூா் தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த கடலூா் மாவட்டம், வேப்பூரை அடுத்த பெரியநெசலூா் கிராமத்தைச் சோ்ந்த ராமலிங்கம் மகள் ஸ்ரீமதி (17) கடந்த 13-ஆம் தேதி மா்மமான முறையில் உயிரிழந்தாா்.  மாணவியின் சாவில் மர்மம் இருப்பதாகக் குற்றம்சாட்டி அவரது பெற்றோர், மகளின் உடலைக் கூட பெறாமல், தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com