எட்டுக்குடி முருகன் கோயில்: ஆடி கிருத்திகை சிறப்பு வழிபாடு

திருக்குவளை அருகே பிரசித்தி பெற்ற எட்டுக்குடி முருகன் திருக்கோயிலில் ஆடி‌ மாத கிருத்திகையையொட்டி முன்னிட்டு சிறப்பு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் சனிக்கிழமை நடைபெற்றது.
 முருகனின் ஆதிபடை வீடு என அழைக்கப்படும் எட்டுக்குடி முருகன்
 முருகனின் ஆதிபடை வீடு என அழைக்கப்படும் எட்டுக்குடி முருகன்

திருக்குவளை அருகே பிரசித்தி பெற்ற எட்டுக்குடி முருகன் திருக்கோயிலில் ஆடி‌ மாத கிருத்திகையையொட்டி முன்னிட்டு சிறப்பு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் சனிக்கிழமை நடைபெற்றது.

நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளையை அடுத்த எட்டுக்குடியில் முருகனின் ஆதிபடை வீடு என அழைக்கப்படும்  பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திரம் அன்று சிறப்பு வழிபாடுகள் விமர்சையாக  நடைபெறுவது வழக்கம். குறிப்பாக ஆடி மாத  கிருத்திகையான சனிக்கிழமை 4 கால சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. 

சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள்.

முன்னதாக பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

பல்வேறு மாவட்டங்களில் இருந்து காலை முதலே ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

எட்டுக்குடி முருகன் கோயில் குளம்

பக்தர்களின் வருகையை முன்னிட்டு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு தரிசனத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நாகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. சனிக்கிழமை இரவு 8 மணிக்கு வெள்ளி மயில் வாகனத்தில் சிறப்பு வீதியுலா காட்சியும் நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com