செஸ் ஒலிம்பியாட்: பட்டு வேட்டி, சட்டையில் முதல்வர் மு.க. ஸ்டாலின்

உலகின் மிகப்பெரிய செஸ் திருவிழாவான 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையில் இன்று கோலாகலமாகத் தொடங்கியது. நிகழ்ச்சியில் பட்டு வேட்டி, சட்டையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

உலகின் மிகப்பெரிய செஸ் திருவிழாவான 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையில் இன்று கோலாகலமாகத் தொடங்கியது. நிகழ்ச்சியில் பட்டு வேட்டி, சட்டையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.

செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமா் நரேந்திர மோடி தொடக்கிவைக்கவிருக்கிறார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் தொடக்க விழாவும், மாமல்லபுரத்தில் போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வியாழக்கிழமை தொடங்கி ஆக. 10-ஆம் தேதி வரை 14 நாள்கள் நடைபெறுகின்றன. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் விழாவில் பிரதமா் நரேந்திர மோடி போட்டியைத் தொடக்கிவைக்கிறாா்.

பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் தொடக்க விழாவில் கலந்து கொள்கின்றனர். தொடக்க விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பட்டு வேட்டி, சட்டையில் பங்கேற்றுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் சென்னை வருகை தாமதமானதால், தொடக்க விழா திட்டமிட்டபடி தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி தற்போது சென்னை விமான நிலையம் வந்தடைந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஃபிடே, ஏஐசிஎஃப், தமிழக அரசு சார்பில் சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள போர்பாயிண்ட்ஸ் ஓட்டலில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறவிருக்கின்றன.

 இதற்காக 2 பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு ஒரே நேரத்தில் 1400 பேர் ஆடக்கூடிய வகையில் 702 டிஜிட்டல் செஸ் போர்டுகள் நிறுவப்பட்டுள்ளன.

செஸ் ஒலிம்பியாட் வரலாற்றிலேயே இப்போட்டிக்கு தான் 187 நாடுகளில் இருந்து 2,500-க்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com