4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

அபாய நிலையில் ஆற்றுப் பாலங்கள்: உடனடியாகச் சீரமைக்க தமிழக அரசுக்கு மநீம கோரிக்கை

அபாய நிலையில் ஆற்றுப் பாலங்களை உடனடியாகச் சீரமைக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கோரிக்கை விடுத்துள்ளது. 

News image
Updated On :29 ஜூலை 2022, 1:40 pm

DIN

அபாய நிலையில் ஆற்றுப் பாலங்களை உடனடியாகச் சீரமைக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கோரிக்கை விடுத்துள்ளது. 

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட அறிக்கையில், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஓங்கூர் சுங்கச்சாவடி அருகே உள்ள ஆற்றுப் பாலம் மிகவும் பழுதடைந்து, வாகனங்கள் செல்லும்போது தாலாட்டுவதுபோல ஆடியது. விபத்து அச்சத்துடனேயே இப்பாலத்தில் வாகன ஓட்டிகள் பயணம் செய்யும் பரிதாப நிலை நீடித்தது.

இதுகுறித்து சமூக வலைதளங்களில் செய்தி வெளியாகி வைரலான பிறகுதான், அதிகாரிகள் ஆற அமர நடவடிக்கை எடுக்கின்றனர். பாலத்தை தொடர்ந்து பராமரித்திருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்காது. தற்போதும் கண்துடைப்புக்காக நடவடிக்கை எடுக்காமல், மக்களின் பாதுகாப்பை நினைவில்கொண்டு சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இதேபோல, தமிழ்நாடு முழுவதும் மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில், மிகவும் மோசமான நிலையில் உள்ள பாலங்கள் மற்றும் சாலைகளை ஆய்வு செய்து, அவற்றை உடனடியாகச் சீரமைக்க வேண்டும். பாதுகாப்பு விஷயத்தில் அலட்சியம் கூடாது என்று மக்கள் நீதி மய்யம் அரசைக் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.