'தமிழ்ச் சமூகத்தைத் தட்டியெழுப்பிய பகுத்தறிவாளர்' - கருணாநிதிக்கு ஸ்டாலின் புகழாரம்!

தமிழுக்காகவும் தமிழர் நலனுக்காகவும் வாழ்நாளெல்லாம் போராடியவர் கருணாநிதி என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். 
ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை
ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை

தமிழுக்காகவும் தமிழர் நலனுக்காகவும் வாழ்நாளெல்லாம் போராடியவர் கருணாநிதி என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். 

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாள் அரசு விழாவாக இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசு சார்பில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.  

இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயம், முரசொலி அலுவலகம், ஓமந்தூரார் அரசினர் தோட்டம் ஆகிய இடங்களில் உள்ள கருணாநிதி சிலைக்கு மரியாதை செலுத்தினார். இறுதியாக சென்னை மெரீனாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று மலர் அஞ்சலி செலுத்தினார். 

இதையடுத்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ''தமிழுக்காகவும் தமிழர் நலனுக்காகவும் வாழ்நாளெல்லாம் போராடிய போராளி; ஆட்சித் தேரைச் சமூகநீதிப் பாதையில் செலுத்திய சமத்துவச் சிந்தனையாளர்; திராவிடக் கொள்கைகளால் தமிழ்ச் சமூகத்தைத் தட்டியெழுப்பிய பகுத்தறிவாளர்; 'உடன்பிறப்பே...' என நம்மை உளமார அழைத்து உணர்வூட்டிய தலைவர். 

இன்னும் ஓராண்டில் நூற்றாண்டு காணும் தமிழ்நாட்டின் தலைமகன் - தன் உதிரத்தால் எனைச் சமைத்த எந்தை 'தமிழினத் தலைவர்' கலைஞரைப் போற்றினேன்' என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com