
கோப்புப்படம்
சென்னை: சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் ஜூன் 11-ம் தேதி முதல் ரேஷன் கார்டு குறைதீர் முகாம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஜூன் 11 காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ரேஷன் கார்டு குறைதீர் முகாம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட சேவைகளை மேற்கொள்ளலாம். நியாய விலைக் கடைகளில் பொருள் பெற வரமுடியாத மூத்த குடிமக்களுக்கு அங்கீகார சான்று வழங்க நடவிடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.