
முதல்வர் மு.க.ஸ்டாலின்
மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயான கவுன்சில் கூட்டத்தை கூட்ட பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில்,
மத்திய மாநில அரசுகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகளை களைய கவுன்சில் கூட்டங்கள் முறையாக நடத்தப்பட வேண்டும். ஆண்டுக்கு 3 முறை நடத்தப்பட வேண்டிய கவுன்சில் கூட்டம் கடந்த 6 ஆண்டுகளில் 2016ஆம் ஆண்டில் ஒரே ஒருமுறை மட்டுமே கூடியுள்ளது.
இதையும் படிக்க | 'அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும்' - இடதுசாரி கட்சிகள் வலியுறுத்தல்
கூட்டாட்சி உறவுகளை வலுப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள கவுன்சில் கூட்டங்களை உடனடியாக நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...