
தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி
தருமபுரி: தருமபுரி மாவட்ட ஆட்சியராக கி.சாந்தி வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
தருமபுரி மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த ச.திவ்யதர்சினி அண்மையில் இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து சேலம் பட்டு வளர்ச்சித் துறை இயக்குநராக பணியாற்றிய கி.சாந்தி தருமபுரி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.
இதையும் படிக்க | மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2,597 கன அடியாக சரிந்தது
இதனைத் தொடர்ந்து அவர் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார்.