பிரதமரின் அழுத்தத்தால் துணை முதல்வர் பொறுப்பை ஏற்றேன்: ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி

பிரதமரின் அழுத்தத்தால் துணை முதல்வர் பொறுப்பை ஏற்றேன்: ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி

அதிமுகவில் ஒற்றைத் தலைமை சர்ச்சை நிலவி வரும் நிலையில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார்.

பிரதமர் நரேந்திர மோடியின் அழுத்தம் காரணமாக துணை முதல்வர் பொறுப்பை அப்போது ஏற்றுக்கொண்டேன் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை சர்ச்சை நிலவி வரும் நிலையில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம்  செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

"பொதுச்செயலாளர் பொறுப்பு ஜெயலலிதாவுக்கு மட்டுமே உரித்தானது. அவர் வகித்த பொறுப்பை எவரும் வகிக்கக் கூடாது என்பதால், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என இரட்டைத் தலைமை உருவாக்கப்பட்டது. 

அப்போதுகூட நான் கேட்டேன், இந்த இரட்டைத் தலைமை என்பது இதுவரை இல்லாமல் இருந்த ஒன்று. 

பொதுச்செயலாளர் தவிர்த்து மற்ற தலைமைப் பொறுப்புகள் எதையாவது உருவாக்கி நடைமுறைப்படுத்தலாமே என்றேன்.

எனக்குத் துணை முதல்வர் பொறுப்பு தேவையில்லை. இரண்டு முறை ஜெயலலிதாவால் முதல்வராக்கப்பட்டிருக்கிறேன். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகும் அந்தப் பொறுப்பை ஏற்றேன்.

இந்த இணைப்பு அவசியம் தேவை என்ற நிலை உருவானது என்றால், டிடிவி தினகரன் 17 எம்எல்ஏ-க்களை வைத்து எடப்பாடி கே. பழனிசாமி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தார். டிடிவியிடம் இருந்த 17 எம்எல்ஏ-க்கள், திமுக எம்எல்ஏ-க்கள், எங்களிடம் இருந்த 11 எம்எல்ஏ-க்கள் இருந்ததால், அதிமுக ஆட்சி பறிபோக வேண்டிய நிலை உருவானது.

இந்தச் சூழலில்தான் தன்னோடு உடல்நிலையைக் கருத்தில் கொள்ளாமல் 2016-இல் இந்த ஆட்சியை ஜெயலலிதா நிறுவனார். அந்த ஆட்சி பறிபோகக் கூடாது என்பதால்தான், 5 வாக்குகளில் பழனிசாமி தலைமையிலான அரசு காப்பாற்றப்பட்டது.

ஒவ்வொரு கட்சி நடவடிக்கையிலும் இருவரும் கையெழுத்து போட வேண்டும் என்ற உரிமை இருவருக்குமே இருக்க வேண்டும் என்று சொன்னார்கள். தொண்டர்கள் உள்ளத்தில் இரட்டைத் தலைமை எண்ணம் இருந்ததன் காரணத்தினால், இருவரும் கையெழுத்து போட வேண்டும் என்பதற்கு ஒப்புக்கொண்டேன்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் துணை முதல்வர் பொறுப்புக்கு எந்த அதிகாரமும் இல்லை. இதுதான் நிதர்சனமான உண்மை.

பிரதமர் அழைப்பின்பேரில் தில்லி சென்று அவரிடம் உரையாடிபோது, நீங்கள் துணை முதல்வர் பதவியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். அவரிடமும் வேண்டாம் என்று சொன்னேன். ஆனால், அவர் அழுத்தம் கொடுத்ததால், அதை ஏற்றுக்கொண்டேன்.

இதன்பிறகு, நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. நீங்கள் தற்போது ஒற்றைத் தலைமை பற்றி கேட்பது கனவா நனவா என்ற நிலை இருக்கிறது" என்றார் ஓ. பன்னீர்செல்வம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com