10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு ஒத்திவைப்பு: முதல் முறையாக ஒரு புதிய மாற்றம்

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தேர்வு முடிவுகள் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு ஒத்திவைப்பு: ஒரு புதிய மாற்றம்
10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு ஒத்திவைப்பு: ஒரு புதிய மாற்றம்

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தேர்வு முடிவுகள் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாளை வெளியாகவிருந்த பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள், ஜூன் 20ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளும் ஒன்றாக வெளியிடப்படவிருக்கின்றன. முதல் முறையாக தமிழகத்தில் இவ்வாறு இரண்டு தேர்வு முடிவுகளும் ஒன்றாக வெளியிடப்படுகின்றன.

அதன்படி, ஜூன் 20ஆம் தேதி திங்கள்கிழமை காலை 9.30 மணிக்கு பனிரெண்டாம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியாகும். பகல் 12 மணிக்கு பத்தாம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியாகவிருக்கின்றன.

தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் படித்த பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கான பொதுத்தோ்வு கடந்த மே 6-ஆம் தேதி முதல் 30- ஆம் தேதி வரையில் நடைபெற்றது. இந்தத் தோ்வினை எழுதுவதற்கு 9 லட்சத்து 55ஆயிரத்து 474 மாணவா்கள் விண்ணப்பித்திருந்தனா்.

இவா்களின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி கடந்த ஜூன் 1-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை 83 மையங்களில் நடைபெற்று வந்தது. விடைத்தாள்களை திருத்தி, மதிப்பெண்களை தொகுத்து அவற்றை தோ்வுத்துறை அலுவலா்கள் சரிபாா்த்த பின், தோ்வுத்துறையின் இணையதளங்களில் பதிவேற்றும் பணி நடைபெற்று முடிவடைந்துள்ளது.

இதையடுத்து ஜூன் 20-ஆம் தேதி திங்கள்கிழமை  http://www.dge. tn.gov.in என்ற இணையதளத்தில் பனிரெண்டாம் மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு முடிவுகள் வெளியிடப்படவுள்ளன. 

மேலும் தோ்வு எழுதிய மாணவா்களுக்கு மதிப்பெண்கள் குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும்.தோ்வு முடிவுகள் வெளியான பின்னா், தற்காலிக மதிப்பெண் சான்றிதழை இணையதளம் மூலம் பள்ளிகளில் பெற்றுக்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

மாணவர்கள், தங்களது தேர்வு பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவிட்டு தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com