

மக்கள் சேவையில் முதலிடம் வகிப்பது அதிமுக என்று அதன் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் அவர் கூறியதாவது, ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் சேவையில் முதலிடம் வகிப்பது அதிமுக. அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு திமுக அடிக்கல் நாட்டி வருகிறது. ஆட்சியில் இல்லாவிட்டலும் அரசைவிட அதிக பணிகளை செய்யக் கூடியது அதிமுக.
மடிக்கணினி, திருமண உதவித்தொகை, மினி கிளினிக் உள்ளிட்ட திட்டங்களை திமுக முடக்கியுள்ளது. 2017-ல் அரசு பள்ளி மாணவர்கள் வெறும் 9 பேர் மட்டுமே மருத்துவ படிப்பில் சேர முடிந்தது. அதிமுக ஆட்சியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கியதன் மூலம் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர்.
இதையும் படிக்க- கர்நாடகத்தில் 21 அதிகாரிகளின் அலுவலகங்களில் சோதனை
தமது தலைமையிலான அதிமுக ஆட்சியில், மருத்துவம் பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் என அறிவித்தேன். அதிமுக ஆட்சியில் கூட்டுறவு வங்கிகளில் எவ்வித நிபந்தனையும் இன்றி கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் திமுக அரசு நிபந்தனைகள் விதித்து நகைக்கடன் தள்ளுபடி செய்கிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.