
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சந்தேகிக்கப்படும் 21 அதிகாரிகளுக்கு சொந்தமான 80 இடங்களில் கர்நாடக ஊழல் தடுப்புப் பிரிவினர் சோதனை நடத்தியதாக தெரிவித்தனர்.
வெள்ளிக்கிழமை அதிகாலையில் தொடங்கி இந்த சோதனையில் 300 அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றதாக தெரிவித்துள்ளது.
இந்த சோதனையில் முதலீட்டு ஆவணங்களைத் தவிர, மதிப்புமிக்க பொருள்கள் மற்றும் பணம் கண்டுபிடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தன.
சோதனை செய்யப்பட்டவர்களில் நீர்ப்பாசனத்துறை, பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் ஆகிய துறைகளைச் சேர்ந்த பொறியாளர்களும் அடங்குவர்.
மேலும், காவல்துறை அலுவலர், மாவட்ட பதிவாளர், சாலை போக்குவரத்து அதிகாரி, நிர்மிதி கேந்திரா திட்ட இயக்குனர், கடக் மாவட்டத்தில் பஞ்சாயத்து கிரேடு-2 செயலாளர் மற்றும் கால்நடை துறையின் உதவி கட்டுப்பாட்டாளர் ஆகியோரும் அடங்குவர்.
தொடர்ந்து சோதனை நடைபெற்று வருவதால், எந்தவித தகவலும் வெளியிடவில்லை.