உங்களுக்குரிய வேலையை மட்டும் நீங்கள் பாருங்கள் என்று டிரம்புக்கும் அமெரிக்க அரசுக்கும் கடிதம் வழியாக நடிகர் கமல் ஹாசன் எதிர்வினையாற்றியிருக்கிறார்.
ரஷியாவிடமிருந்து இந்தியா 30 நாள்களுக்கு கச்சா எண்ணெய் வாங்கிக்கொள்ள அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது. இதற்கு கடும் ஆட்சேபனை தெரிவிக்கும்விதத்தில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு சனிக்கிழமை (மார்ச் 7) கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது : ‘இந்திய மக்களாகிய நாங்கள், இறையாண்மைமிக்க மற்றும் சுத்ந்திரமானதொரு நாட்டைச் சார்ந்தவர்கள். நாங்கள், தொலைதூரத்திலுள்ள வெளிநாடுகளிலிருந்து வரும் கட்டளைகளை ஒருபோதும் ஏற்க மாட்டோம்.
தயவுசெய்து, உங்கள் தகுதிக்குள்பட்ட உங்களுக்கான வேலையை மட்டும் நீங்கள் கவனியுங்கள்.
இறையாண்மை நாடுகளின் இடையே பரஸ்பர மதிப்பு இருத்தலே உலகளாவிய அமைதி நீடித்திருக்க அடிப்படை அடித்தளமாகும்.
உங்கள் நாட்டுக்கும் அதன் மக்களுக்கும் அமைதியும் வளமும் நல்க வாழ்த்துகிறேன்.
இப்படிக்கு,
கமல் ஹாசன் - ஒரு பெருமைமிகு இந்தியக் குடிமகன்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
Summary
Kamal penned an open letter to Donald Trump telling him to mind his ‘own business’
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கருப்பு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த கமல்!

ரஜினி - கமல் திரைப்படத்தில் த்ரிஷா?

விஜய்யை ஆட்சியமைக்க அழைக்காமல் இருப்பது தமிழகத்திற்கு அவமானம்! கமல் ஹாசன்

படிப்பு மட்டும் போதுமா? செய்யறிவு உங்கள் வேலையை பறிக்காமல் இருக்க என்ன செய்யலாம்?
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



