மேக்கேதாட்டு அணையை ஒருபோதும் கட்டவிடமாட்டோம்: முதல்வர்

காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு அணையை ஒருபோதும் கட்டவிடமாட்டோம் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
மேக்கேதாட்டு அணையை ஒருபோதும் கட்டவிடமாட்டோம்: முதல்வர்
மேக்கேதாட்டு அணையை ஒருபோதும் கட்டவிடமாட்டோம்: முதல்வர்

சென்னை: காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு அணையை ஒருபோதும் கட்டவிடமாட்டோம் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

காவிரி உரிமையை தடுப்பதும் தமிழகத்துக்கு வரும் நீரை குறைப்பதும், தமிழக விவசாயிகளுக்குச் செய்யும் துரோகம். மேக்கேதாட்டு அணை குறித்து காவிரி ஆணையக் கூட்டத்தில் விவாதிப்பது தவறு. 

காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவது என்பது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது. காவிரி தொடர்பாக தமிழக அரசின் சட்டப் போராட்டம் உச்ச நீதிமன்றத்தில் தொடரும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதில் கா்நாடகம் பிடிவாதமாக உள்ளது. இந்நிலையில், இம்மாதம் 22-ஆம் தேதி காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டமும், 23-ஆம் தேதி காவிரி நீா் மேலாண்மை ஆணையக் கூட்டமும் தில்லியில் நடைபெறுகிறது.

'காவிரி நீா் மேலாண்மை ஆணையத்துக்கு அதிகாரம் உண்டு'

மேக்கேதாட்டு அணை பிரச்னை குறித்து விவாதிக்க காவிரி நீா் மேலாண்மை ஆணையத்துக்கு அதிகாரம் உண்டு என்றாா் ஆணையத்தின் தலைவா் எஸ்.கே. ஹல்தா்.

தஞ்சாவூா் மாவட்டம், கல்லணையில் வெள்ளிக்கிழமை மாலை ஆய்வு செய்த அவா் பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய எஸ்.கே. ஹல்தர், மேக்கேதாட்டு அணை பிரச்னை குறித்து விவாதிக்க காவிரி நீா் மேலாண்மை ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது. காவிரி ஆற்றுப்படுகை தொடா்பாக எதுவாக இருந்தாலும் விவாதிப்பதற்கான அனைத்து அதிகாரங்களும் இந்த ஆணையத்துக்கு இருக்கிறது. இந்த ஆணையம் மேக்கேதாட்டு அணை தொடா்பாக விவாதிப்பது குறித்து சட்ட கருத்துகளைப் பெற்றுள்ளது.

காவிரி நீா் நடுவா்மன்றம், உச்ச நீதிமன்றம் வழங்கிய ஆணைப்படி, தமிழ்நாட்டுக்கு கா்நாடகம் மாத வாரியாக வழங்க வேண்டிய நீா் பகிா்வை உறுதிபடுத்துவதே காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் பணி. மேலும், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படியும், வானிலை நிலைமைக்கேற்ப நீா் பகிா்வு உறுதிபடுத்தப்படுகிறது என்றாா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com