காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

என்ன செய்யப் போகிறார் ஓபிஎஸ்? இன்று மாலை செய்தியாளர் சந்திப்பு

இன்று மாலை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்திக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

News image

என்ன செய்யப் போகிறார் ஓபிஎஸ்? இன்று மாலை செய்தியாளர் சந்திப்பு

Updated On :23 ஜூன் 2022, 10:56 am

DIN

சென்னை: ஒற்றைத் தலைமை என்ற கோரிக்கையுடன், அடுத்த பொதுக்குழுக் கூட்டத்துக்கான தேதி அறிவிக்கப்பட்டு அதிமுக பொதுக்குழு நிறைவு பெற்ற நிலையில், இன்று மாலை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்திக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கூச்சல், குழப்பம், சர்ச்சை என நடந்து முடிந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் முறையிட ஓ. பன்னீர்செல்வம் தரப்பு முடிவு செய்திருப்பதாகவும், 23 வரைவு தீர்மானங்களையும் நிராகரித்தது தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு எதிரானது எனவும் ஓபிஎஸ் தரப்பினர் கூறுகிறார்.

அது மட்டுமல்ல, கட்சியின் ஒற்றைத் தலைமை கோரிக்கையை அறிவித்ததும் தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு எதிரானது என்றும் கூறப்படுகிறது. எனவே, தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் வகையில் இன்று மாலை ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்திக்கவிருப்பதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று நடைபெற்ற அதிமுக பொதுக் குழுவில் ஒற்றைத் தலைமையை வலியுறுத்தி பொதுக் குழு உறுப்பினர்கள் கோரிக்கை வைத்திருந்த நிலையில், கூட்டத்திலிருந்து ஓ. பன்னீர்செல்வம் வெளியேறினார்.

சட்டத்துக்கு புறம்பான பொதுக் குழு என்று முழங்கியவாறு, ஓ. பன்னீர்செல்வத்துடன் வைத்திலிங்கமும் கூட்டத்திலிருந்து புறப்பட்டார்.

முன்னதாக, அதிமுகவுக்கு ஒற்றைத்தலைமை வேண்டும், இரட்டைத் தலைமை வேண்டாம் என்று வலியுறுத்தி, பொதுக் குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதத்தை அதிமுக  அவைத் தலைவர் தமிழ் மகன் உசேனிடம், முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அளித்தார்.  இதையடுத்து, பொதுக் குழு உறுப்பினர்களின் கோரிக்கை ஏற்கப்படுவதாக அறிவித்த தமிழ் மகன் உசேன், அடுத்த பொதுக் குழுக் கூட்டம் ஜூலை 11ஆம் தேதி  கூடும் என்று அறிவித்தார்.

இவை அனைத்தும் ஓ. பன்னீர்செல்வம் மேடையில் இருக்கும் போதே, அவரைத் தனிமைப்படுத்தும் வகையில் நடத்தப்பட்டது.

இதையடுத்து, சட்டத்துக்குப் புறம்பான பொதுக்குழு என்று வைத்திலிங்கம் கோஷமிட்டார். ஆனால், அவரது மைக் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்ததால் அவரது குரல் வெளியே வரவில்லை. இதையடுத்து, வைத்திலிங்கம் மற்றும் ஓ. பன்னீர்செல்வம் இருவரும் மேடையிலிருந்து கீழே இறங்கி, பொதுக் குழுக் கூட்டத்திலிருந்து வெளியேறினர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.