காலதாமதமாக இயக்கப்படும் சென்னை மெட்ரோ ரயில்கள்: காரணம் என்ன?

சென்னை மெட்ரோ ரயில்கள் காலதாமதாக இயக்கப்படுவது குறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. 
காலதாமதமாக இயக்கப்படும் சென்னை மெட்ரோ ரயில்கள்: காரணம் என்ன?

சென்னை மெட்ரோ ரயில்கள் காலதாமதாக இயக்கப்படுவது குறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. 

சென்னை மெட்ரோ ரயில் சேவையானது இரண்டு வழித்தடங்களில் இயக்கப்படுவதில் கடந்த சில மணி நேரங்களாக தாமதம் ஏற்பட்டது. இதனால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர். 

இந்நிலையில் இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. இதுதொடர்பாக அந்நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொழில்நுட்ப கோளாறு காரணமாக இரண்டு வழித்தடங்களிலும் சென்னை மெட்ரோ ரயில் சென்று வருவதில் சிறு தாமதம் ஏற்படுகிறது. இந்த தொழில்நுட்ப கோளாறு உடனடியாக சரிசெய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக நெரிசல்மிகு நேரத்திலும் இரண்டு வழித்தடங்களில் செல்லும் மெட்ரோ ரயில்கள் 10 நிமிடத்திற்கு ஒருமுறை சற்று தாமதமாக இயக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com