ஜூலை 11 பொதுக்குழுவில் பழனிசாமி  ஒற்றைத் தலைமை ஏற்பாரா? ஜெயகுமார் பேட்டி 

ஜூலை 11 ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக சிறப்புப் பொதுக்குழுவில் திட்டமிட்டபடி எடப்பாடி கே.பழனிசாமி ஒற்றைத் தலைமை ஏற்பார் என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
ஜெயக்குமார்
ஜெயக்குமார்


ஜூலை 11 ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக சிறப்புப் பொதுக்குழுவில் திட்டமிட்டபடி எடப்பாடி கே.பழனிசாமி ஒற்றைத் தலைமை ஏற்பார் என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் இரட்டைத் தலைமை பதவிகள் காலாவதியாகிவிட்டது என்றால், பொருளாளரான ஓ.பன்னீா்செல்வத்துக்குத்தான் பொதுக்குழுவைக் கூட்டுவது உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களும் இருக்கின்றன.

பொதுக்குழுவில் கொண்டுவரப்பட்ட அனைத்துத் தீா்மானங்களும் நிராகரிக்கப்பட்டபோது, பொதுக்குழு உறுப்பினா்களின் பதவியும் ரத்தாகிறது என்று கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளா் வைத்திலிங்கம் கூறினாா்..

பொதுக்குழு உறுப்பினா்களில் ஐந்தில் ஒரு பங்கு உறுப்பினா்கள் கையெழுத்திட்டு பொதுக்குழுவைக் கூட்ட முடியும் என்பது உண்மைதான் என்று கூறினார். 

இந்நிலையில், சென்னை காமராஜர் சாலையில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் அதிமுக அவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர்களுடன் மரியாதை செலுத்தினார்.

பின்னர், ஜெயகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், பொதுக்குழுவால் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் அதிமுகவில் அடிமட்ட தொண்டன் உயரிய பதவியை அடையலாம் என்பதற்கு சிறந்த சான்றாகும்.

யாரையும் அவமதிக்கும் எண்ணம் அதிமுகவிற்கு இல்லை. பொதுக்குழு தான் உச்சபட்ச அதிகாரம் கொண்டது. ஜூலை 11 ஆம் தேதி நடைபெற உள்ள சிறப்புப் பொதுக்குழுவில் கட்டாயம் ஒற்றைத் தலைமை தீர்மானம் நிறைவேற்றப்படும். அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக எடப்பாடி கே.பழனிசாமி தேர்ந்தெடுக்கப்படுவார். 

ஒற்றைத் தலைமை விவகாரத்தில் பாஜகவின் தலையீடு இருந்தாலும் ஏற்க மாட்டோம் என்றார்.  

மேலும், ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களும் ஒற்றைத் தலைமையை விரும்புவதாக தெரிவித்த ஜெயகுமார், நடந்து முடிந்த பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் மீது பாட்டில்கள் வீசப்பட்டது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ஒட்டுமொத்த தொண்டர்களும் பன்னீர்செல்வம் செயல்பாட்டில் அதிருப்தியாக இருப்பதாக பதிலளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com