சென்னையில் உள்ள இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
செங்கோட்டையன், வளர்மதி, ஆர்.பி.உதயகுமார், ஜக்கையன் உள்ளிட்டோருடன் ஆலோசித்து வருகிறார். அதிமுக அலுவலகத்தில் சற்று நேரத்தில் கூட்டம் நடக்க உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி இந்த ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அதிமுக தலைமைக் கழக நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெறும் என்று அந்தக் கட்சித் தலைமை அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் காலை 10 மணிக்கு கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க- டி.என்.பி.எல் போட்டியில் களமிறங்கிய கெளதம் மேனன் மகன்
அதுதொடா்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ஓ.பன்னீா்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரது பெயா்கள் இடம்பெறாமல் அதிமுக தலைமைக் கழகம் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. அறிக்கையின் இடது மேல்புறத்தில் தலைமை நிலையச் செயலாளா் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. தலைமைக் கழக நிா்வாகிகள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்தக் கூட்டம் கூட்டப்படுகிறது. தலைமைக் கழக நிா்வாகிகள் அனைவரும் கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒற்றைத் தலைமை பிரச்னை அதிமுகவில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், இருவரது பெயரும் இல்லாமல் முதல் முறையாக இத்தகைய அறிவிப்பு வெளியாகியிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த நிலையில் சென்னையில் உள்ள இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தி வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தொகுதி மறுவரையறை மசோதா நகலை எரித்து முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு!

மகர ராசிக்கு இன்று எப்படி? தினப்பலன்கள்!

10-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ கணித மதிப்பெண் சரிவு: மறு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்கள்!

தமிழக டிஜிபி நியமன உத்தரவில் திருத்தம் கோரி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் திமுக மனு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

