அபுதாபி சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், ஐக்கிய அரபு அமீரக தொழில் துறை அமைச்சர் சுல்தான் பின் அகமதுடன் சந்திப்பு மேற்கொண்டுள்ளார்.
நான்கு நாள் பயணமாக முதல்வா் மு.க.ஸ்டாலின் துபை மற்றும் அபுதாபி சென்றுள்ளார். முதலில் துபை சென்று அங்கு பல்வேறு முதலீட்டாளா்களைச் சந்தித்துப் பேசினார். தமிழகத்தில் தொழில் தொடங்க அந்நாட்டு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
அந்த வகையில், ரூ.2,600 கோடி மதிப்பிலான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் துபையில் சனிக்கிழமை பரிமாறிக்கொள்ளப்பட்டன.
துபை பயணத்தை முடித்துக்கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அபுதாபி சென்றுள்ள நிலையில் அமீரக தொழில் துறை அமைச்சர் சுல்தான் பின் அகமதுவை சந்தித்துப் பேசியுள்ளார். அங்குள்ள தொழில்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
அபுதாபி - தமிழகம் இடையே உள்ள வர்த்தகம் குறித்தும் அந்நாட்டில் உள்ள தமிழர்களின் நலன் குறித்தும் பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின், ஐக்கிய அரபு அமீரக முதலீட்டர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எந்த தொகுதியில் போட்டி? அண்ணாமலை பதில்! | BJP | ADMK

நடப்பு நிதியாண்டின் யூரியா உற்பத்தி 275.75 லட்சம் டன்!
வடகிழக்கு மக்களுக்கு எதிரான இனப் பாகுபாடு குற்றங்கள்: மத்திய அரசிடம் தரவுகள் இல்லை!

வீட்டுக்கு வீடு ஃபிரிட்ஜ்! அதிமுக தேர்தல் வாக்குறுதிகள்!
வீடியோக்கள்

அதிமுகவின் ஃபிரிட்ஜ் அறிவிப்பு திமுகவுக்கு நெருக்கடியா?: கனிமொழி சோமு மறுப்பு!
தினமணி வீடியோ செய்தி...
அதிமுகவை முந்துகிறதா தவெக ? | UN Kannan interview | DMK | ADMK | TVK | BJP |TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

விலையில்லா Fridge, 3 Gas Cylinders! ADMKவின் கவர்ச்சிகர தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு! | EPS
தினமணி வீடியோ செய்தி...

இடதுசாரி அரசியலைப் பாதுகாக்கவே இந்த 8 தொகுதிகள்! Thirumavalavan Press meet | VCK
தினமணி வீடியோ செய்தி...

