ராஜஸ்தானில் மே 8 முதல் வெப்ப அலை வீசும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

ராஜஸ்தானில் மே 8 முதல் மீண்டும் வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
ராஜஸ்தானில்  மே 8 முதல் வெப்ப அலை வீசும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

ராஜஸ்தானில் மே 8 முதல் மீண்டும் வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக வெப்பம் தக்கித்துவந்த நிலையில், மக்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தின் சில இடங்களில் லேசான மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது. 

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெயிட்ட தகவலில், 

ராஜஸ்தானின் சில பகுதிகளில் மீண்டும் நாளை முதல் வெப்ப அலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது. 

ஜோத்பூர், பிகானர், ஜெய்ப்பூர் மற்றும் பரத்பூர் ஆகிய மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 44 முதல் 45 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

மாநிலத்தின் பார்மர் பகுதியில் இன்று அதிகபட்சமாக 43.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

மக்களை வாட்டி வதைத்து வரும் அதிக வெப்பம் காரணமாக, பொதுமக்கள் தேவையின்றி வெளியில் வருவதைத் தவிர்க்க வேண்டும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com