புதுச்சேரி கம்பன் கழகத்தின் 55-ஆவது ஆண்டு விழா தொடங்கியது

புதுச்சேரி கம்பன் கழகத்தின் 55-ஆவது ஆண்டு விழா, நிகழாண்டு கம்பன் விழா இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தொடங்கி உள்ளது.
புதுச்சேரி கம்பன் கழகத்தின் 55-ஆவது ஆண்டு விழா தொடங்கியது
புதுச்சேரி கம்பன் கழகத்தின் 55-ஆவது ஆண்டு விழா தொடங்கியது

புதுச்சேரி கம்பன் கழகத்தின் 55-ஆவது ஆண்டு விழா, நிகழாண்டு கம்பன் விழா இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தொடங்கி உள்ளது.

புதுச்சேரி கம்பன் கலையரங்கில் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு கம்பன் விழா தொடங்கியது.

தொடக்க விழாவிற்கு உச்ச நீதிமன்ற நீதிபதி வி. ராமசுப்பிரமணியன் தலைமை வகித்தார். புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி வரவேற்று பேசினார். 

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் தொடக்கவுரை நிகழ்த்துகிறார். மலேசியா நாட்டின் மனித வளத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ மு. சரவணன் சிறப்புரையாற்றுகிறாா்.

முன்னதாக தொடக்க நிகழ்ச்சியாக கம்பரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். குத்து விளக்கு ஏற்றி கம்பன் விழா தொடங்கியது.

சட்டப்பேரவை தலைவர் ஆர். செல்வம், அமைச்சர் ஏ. நமச்சிவாயம், கம்பன் கழக செயலாளர் வி பி சிவக்கொழுந்து, பொருளாளர் எம்பி எஸ். செல்வகணபதி, எம்எல்ஏக்கள், தமிழறிஞர்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.

முற்பகல் 11.30 மணிக்கு தனியுரையும், மாலை 6.30 மணிக்கு கருத்தரங்கமும் நடைபெறுகிறது. 

தொடர்ந்து 14-ஆம் தேதி காலையில் நடைபெறும் இளையோா் அரங்குக்கு ராமலிங்கம் தலைமை வகிக்கிறாா். அன்று காலை 10.15 மணிக்கு மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கும் விழாவும், 10.45 மணிக்கு வழக்காடு மன்றமும் நடைபெறும். கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் நடுவராக இருப்பாா். மாலை 5 மணிக்கு கவியரங்கம் நடைபெறும். இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி தலைமை வகித்து சிறப்புரையாற்றுவாா். தொடந்து, ‘போற்றுவேன் கம்பனை புகழ்ந்து’ என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெறும்.

மாலை 5 மணிக்கு தனியுரையும், படித்தவரும் மிகவும் நெகிழும் பாத்திரம் என்ற தலைப்பில் பட்டிமன்றமும் நடைபெறும். அதற்கு ராமலிங்கம் நடுவராக இருப்பாா்.

15-ஆம் தேதி காலை சிந்தனை அரங்கம் நடைபெறும். மாலையில் நடைபெறும் தனியுரையில் தமிழருவி மணியன் பங்கேற்று பேசுகிறாா். விழா நிறைவாக அன்று மாலை 6 மணிக்கு மேல்முறையீடு நிகழ்ச்சி நடைபெறும். இதில் உச்சநீதிமன்ற நீதிபதி வி. ராமசுப்பிரமணியன் நடுவராக பங்கேற்று பேசுகிறாா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com