இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

சுருளிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் வைகாசி பெளர்ணமி சிறப்பு பூஜை

தேனி மாவட்டம், சுருளிமலையில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் வைகாசி மாத பிறப்பு மற்றும் பெளர்ணமி சிறப்பு பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image

சுருளிமலை ஸ்ரீ ஐயப்பன்

Updated On :15 மே 2022, 2:49 pm IST


கம்பம்: தேனி மாவட்டம், சுருளிமலையில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் வைகாசி மாத பிறப்பு மற்றும் பெளர்ணமி சிறப்பு பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தேனி மாவட்டத்தில் புகழ் பெற்ற சுருளி அருவி, சுருளிமலையில் அமைந்துள்ளது ஸ்ரீ ஐயப்பன் கோயில். இந்த கோயிலில் வைகாசி தமிழ் மாத பிறப்பு மற்றும் பெளர்ணமியை முன்னிட்டும்  சிறப்பு பூஜை  நடைபெற்றது.

ஸ்ரீ ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனைகள் மற்றும் பெளர்ணமி நாள் சிறப்பு பூஜையை கோயில் அர்ச்சகர் கணேஷ் திருமேனி செய்திருந்தார்.

நடைபெற்ற வைகாசி மாத மற்றும் பெளர்ணமி தின சிறப்பு பூஜைகளில்  கம்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆண், பெண் பக்தர்கள் கலந்து கொண்டு பிரசாதம் பெற்றுச் சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.