
தாமஸ் கோப்பையை வென்ற இந்திய பேட்மிண்டன் அணிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள அவர், 14 முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்தோனேஷியாவை வீழ்த்தி இந்தியா தாம்ஸ் கோப்பையை முதல்முறையாக வென்றுள்ளது. இந்த உண்மையான வலாற்று வெற்றியை பெற்றுத்தந்த வீரர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.
தாமஸ் கோப்பைக்கான பேட்மிண்டன் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்றது. இன்று நடந்த இறுதிப்போட்டியில் இந்தோனேஷிய அணியை, இந்தியா எதிர்கொண்டது. அதில் 3-0 என்ற கணக்கில் இந்தோனேஷிய அணியை வீழ்த்தி இந்திய அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
இதன்மூலம் 14 முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்தோனேஷியாவை இறுதிப் போட்டியில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. 73 ஆண்டுகால தாமஸ் கோப்பை பேட்மிண்டன் வரலாற்றில் இந்தியா முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
India wins #ThomasCup for the first time by beating 14-time Champion Indonesia.
— M.K.Stalin (@mkstalin) May 15, 2022
This is a red-letter day for Indian Sports.
My hearty congrats to all the players who helped India to script this truly historic victory. pic.twitter.com/dahGxAd7ZG