
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வருகையையொட்டி சென்னையில் தலைமை செயலாளர் வெ.இறையன்பு ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
டிஜிபி சைலேந்திர பாபு, மாநகர காவல் ஆணையர் சங்கல் ஜிவால் உள்ளிட்ட அதிகாரிகள் தலைமை செயலர் உடனான ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.
தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட மே 26ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியும், மே 28ஆம் தேதி குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு சென்னைக்கு வருகை புரிகின்றனர்.
இதனையொட்டி சென்னையில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்டவை குறித்து தலைமை செயலாளர் இறையன்பு, அதிகாரிகளுடன் விவாதிப்பதாகத் தெரிகிறது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...