கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 5 மாவட்டத்தில் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!


கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 5 மாவட்டத்தில் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கிருஷ்ணகிரி அணை நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதேபோல், கர்நாடகத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், கிருஷ்ணகிரி  கே.ஆர்பி அணைக்கு வினாடிக்கு 1177 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் தெண்பெண்ணை ஆற்ரியில் தண்ணீர் கரைபுரண்டு ஒடுகிறது.

எனவே, அணைக்கு நீா்வரத்தை பொருத்து பாதுகாப்பு கருதி அணையிலிருந்து நீா் வெளியேற்றப்பட வேண்டியுள்ளதால் தென்பெண்ணையாற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு மாவட்ட நிா்வாகம் மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 2300 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் கிருஷ்ணகிரி, தருபமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 5 மாவட்டத்தில் உள்ள ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com