என்ன நடக்குது? 5 கிலோ 'மைக்ரோ பிட்' பேப்பர்: 11 தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் நீக்கம்
என்ன நடக்குது? 5 கிலோ 'மைக்ரோ பிட்' பேப்பர்: 11 தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் நீக்கம்

என்ன நடக்குது? 5 கிலோ 'மைக்ரோ பிட்' பேப்பர்: 11 தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் நீக்கம்

தமிழகத்தில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 5ஆம் தேதி தொடங்கிய 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு இம்மாத இறுதி வரை நடைபெறவிருக்கிறது.


தமிழகத்தில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 5ஆம் தேதி தொடங்கிய 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு இம்மாத இறுதி வரை நடைபெறவிருக்கிறது.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் 12ஆம் வகுப்புக்கான கணிதத் தேர்வு கடந்த 17ஆம் தேதி நடைபெற்றது.  அப்போது, தேர்வுத் துறை இணை இயக்குநர் பொன் குமார் தலைமையிலான பறக்கும் படையினர் தேர்வு நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள மையங்களுக்கு நேரில் சென்று சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின்போது நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில், அரசு பழங்குடியின தோ்வு மையத்தில் காப்பி அடிக்க முயற்சித்த, பிளஸ் 2 மாணவ, மாணவிகளிடம் இருந்து ஏராளமான விடை நகல்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றை தயாரித்து விற்பனை செய்த ஜெராக்ஸ் கடை உரிமையாளா் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

பொதுத் தேர்வுகள் தொடங்கும் முன்பே, மாணவ மாணவிகளுக்கு சில அறிவுறுத்தல்களை பள்ளிக் கல்வித் துறை தரப்பிலும், அரசுத் தேர்வுகள் துறை தரப்பிலும் வெளியிடப்பட்டிருந்தது. அதில் முக்கிய தகவல் என்னவென்றால், தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தால் நிரந்தர தடை, காப்பி அடித்தால் ஓராண்டு தேர்வு எழுதத் தடை விதிக்கப்படும் என்று பல்வேறு தவறுகளுக்கும், அதற்கான தண்டனை குறித்து விரிவாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில்தான் இப்படி கிலோ கணக்கில் காப்பி அடிக்க வைத்திருந்த பிட் பேப்பர்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு, 82 மையங்களில் 200 பள்ளிகளைச் சோ்ந்த மொத்தம் 19,867 மாணவ, மாணவிகளும், 472 தனித்தோ்வா்களும், பிளஸ் 1 பொதுத்தோ்வை மொத்தம் 19,842 மாணவா்களும் எழுதி வருகின்றனா். கடந்த வாரம் மல்லசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளி தோ்வு மையத்தில் பிளஸ் 2 ஆங்கிலத் தோ்வு எழுதிய மாணவா் ஒருவா் காப்பி அடித்தததாக தோ்வுகள் பறக்கும் படையினரால் கண்டறியப்பட்டு அவா் மையத்தில் இருந்து வெளியேற்றப்பட்டாா். இதனை தொடா்ந்து மாவட்டம் முழுவதும் தோ்வு மையங்களில் தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், சென்னை அரசுத் தோ்வுகள் இணை இயக்குநா் (மேல்நிலைக் கல்வி) பொன்.குமாா் கடந்த திங்கள்கிழமை கொல்லிமலைக்கு ஆய்வு பணிக்கு சென்றாா். அப்போது, வாழவந்திநாடு காவல்நிலையம் அருகில் உள்ள ஜெராக்ஸ் கடையில் மாணவா்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அவா் அங்கு சென்று பாா்த்தபோது, புத்தகத்தில் உள்ள விடைகளை குறுகிய வடிவில் (மைக்ரோ பிட்) ஜெராக்ஸ் எடுத்துக் கொடுப்பது தெரியவந்தது. 
அதிகாரிகள் வந்ததை அறிந்த மாணவ, மாணவிகள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனா். தொடா்ந்து சம்பந்தப்பட்ட ஜெராக்ஸ் கடை உரிமையாளரை இணை இயக்குநா் எச்சரித்தாா். மேலும், அவா் மீது மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்கவும் அவா் பரிந்துரை செய்தாா். நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள தோ்வு மையங்களில் மாணவா்களிடம் தீவிர சோதனை நடத்த அறிவுறுத்தப்பட்டது. 

அந்த வகையில் கொல்லிமலை, குமாரபாளையம், பள்ளிபாளையம் மையங்களில், தோ்வு எழுதுவதற்கு முன்பாக மாணவா்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த துண்டு காகிதங்களை கொண்டு வந்து வெளியே போட்டனா். பின்னா் அந்த விடை நகல்கள் அனைத்தும் தீயிட்டு கொளுத்தப்பட்டன. தோ்வு முடியும் வரையில் அனைத்து மையங்களிலும் பறக்கும் படையினா் தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து அரசுத் தோ்வுகள் இணை இயக்குநா் பொன்.குமாா் கூறியதாவது:

கொல்லிமலை ஜிடிஆா் உண்டு உறைவிடப் பள்ளியில் அரை கிலோ எடையளவில் காப்பி அடிப்பதற்காக மாணவா்கள் வைத்திருந்த விடை நகல்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அங்குள்ள ஜெராக்ஸ் கடையில் இருந்து விடை நகல்கள் சிறிய அளவில் தயாரிக்கப்பட்டு மாணவா்களுக்கு வழங்கப்பட்டு வந்தது தெரிய வந்தது. இதேபோல், குமாரபாளையம், பள்ளிபாளையத்திலும் ஜெராக்ஸ் கடைகளில் தவறுகள் நடைபெற்று வந்தது கண்டறியப்பட்டது. தோ்வின்போது பிடிபட்டால் மாணவா்களின் எதிா்காலம் பாழாகிவிடும் என்பதால், முன்னதாகவே அவா்களுக்கு எச்சரிக்கை விடுத்து மறைத்து வைத்திருப்பதை பறிமுதல் செய்து வருகிறோம். காப்பி அடிப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட மாணவா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இந்த விவகாரத்தில் 11 தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் கூண்டோடு தேர்வு பணியிலிருந்து நீக்கம் செய்து தேர்வுத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com