திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

மே 28ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வருகிற சனிக்கிழமை(மே 28) நடைபெறவிருப்பதாக கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

News image
கோப்புப்படம்
Updated On :23 மே 2022, 8:30 am

DIN

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வருகிற சனிக்கிழமை(மே 28) நடைபெறவிருப்பதாக கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சித் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் சனிக்கிழமை(மே 28) காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ள கூட்டத்தில் மாவட்டச் செயலாளா்கள்/மாவட்டப் பொறுப்பாளர்கள் கலந்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

வருகிற ஜூன் 3 ஆம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்படுவதையொட்டி, அதுகுறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், திமுக உட்கட்சித் தேர்தல் நடந்து வருவதால் அதுகுறித்தும் பேசப்படலாம் என்று கூறப்படுகிறது. 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.