
சென்னையை சுட்டெரிக்கும் சூரியன்: காரணம் இருக்கிறதாம்
கத்திரி தொடங்கிய நாளில் மழையும் தொடங்கி சென்னை உள்ளிட்ட இடங்களை குளு குளுவென மாற்றியிருந்த நிலையில், கடந்த வாரம் முதல் மீண்டும் சென்னையை சூரியன் சுட்டெரிக்கத் தொடங்கிவிட்டது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுவது என்னவென்றால், சென்னையில், கடற்காற்று தாமதமாக வீசத் தொடங்குவதால் அடுத்த 3 நாள்களுக்கு வெயில் கொளுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. சனிக்கிழமைகளில் விடுமுறை: பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி
மேலும், இன்று காலை 8.30 மணி நிலவரப்படி 11 மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரியை தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடலூர், நாமக்கல், தஞ்சை, திருச்சி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று வெப்பநிலை 100 டிகிரியை தாண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காலை 8 மணிக்கெல்லாம் வெயில் சுட்டெரிக்கத் தொடங்கிவிடுவதால், பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாமல் ஆகிறது. கத்திரி எனப்படும் அக்னி நட்சத்திரம் வரும் 28ஆம் தேதியுடன் முடிவடைதால் அதுவரை வெயில் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிக்க.. சென்னையை சுட்டெரிக்கும் சூரியன்: காரணம் இருக்கிறதாம்
பகலில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் நிலவுதால் இரவிலும் புழுக்கம் காணப்படுகிறது. கடற்காற்று வீசத் தாமதமாவதால் தான் சென்னையில் வெயில் கொளுத்துகிறது என்று கூறப்படுகிறது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...