பாமக புதிய தலைவர் அன்புமணி ராமதாஸ்

சென்னை திருவேற்காட்டில் இன்று நடைபெற்ற பாமக பொதுக் குழுக் கூட்டத்தில், கட்சியின் புதிய தலைவராக அன்புமணி ராமதாஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். 
பாட்டாளி மக்கள் கட்சி புதிய தலைவராக பொறுப்பேற்றிருக்கும் மருத்துவர் அன்புமணி ராமதாஸுக்கு செங்கோல் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தபோது...
பாட்டாளி மக்கள் கட்சி புதிய தலைவராக பொறுப்பேற்றிருக்கும் மருத்துவர் அன்புமணி ராமதாஸுக்கு செங்கோல் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தபோது...

சென்னை: சென்னை திருவேற்காட்டில் இன்று நடைபெற்ற பாமக பொதுக் குழுக் கூட்டத்தில், கட்சியின் புதிய தலைவராக அன்புமணி ராமதாஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். 

கட்சியின் புதிய தலைவராக அறிவிக்கப்பட்டிருக்கும் அன்புமணியை, கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கட்டித் தழுவி கண்ணீர்மல்க தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

இதையும் படிக்க.. பாமக தலைவர் அன்புமணி: கட்டித்தழுவி வாழ்த்துச் சொன்ன ராமதாஸ் 

சென்னை அருகே திருவேற்காட்டில் பாமக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.

பாமகவின் சிறப்புக் பொதுக்குழுக் கூட்டம் ஜி.பி.என். பேலஸ் திருமண அரங்கில் சனிக்கிழமை காலை 11 மணியளவில் தொடங்கியது. கூட்டத்துக்கு பாமக நிறுவனா் ராமதாஸ் தலைமை வகித்தார். தலைவா் ஜி.கே.மணி முன்னிலை வகித்துப் பேசினார். கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினா்கள், சிறப்பு விருந்தினா்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் பாமக புதிய தலைவராக அன்புமணி ராமதாஸை முன்மொழிந்து பேசினார் தலைவர் ஜி.கே. மணி. இதையடுத்து அன்புமணி ராமதாஸ் பாமகவின் புதிய தலைவராக ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.

பாமக தலைவராக ஜி.கே.மணி பொறுப்பேற்று 25 ஆண்டுகள் ஆகும் நிலையில், கட்சிக்கு புதுப்பொலிவு கொடுக்கும் பொருட்டு, பாமக இளைஞரணித் தலைவராக இருக்கும் அன்புமணி கட்சியின் தலைவராக பொதுக்குழுவில் ஒருமனதாகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

2004-2009-ஆம் ஆண்டு காலத்தில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக அன்புமணி இருந்தாா். அப்போது, பொது இடங்களில் புகைபிடிக்கத் தடைச் சட்டம், 108 ஆம்புலன்ஸ் உள்பட பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்தவர். வரும் மக்களவைத் தோ்தல், சட்டப்பேரவைத் தோ்தலை அன்புமணி தலைமையில் பாமக எதிர்கொள்ளவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

==

பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டிருப்பது?

அ. குடும்ப அரசியல்

ஆ. தகுதி வாய்ந்த தேர்வு

இ. வேறு வழியில்லை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com