மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

குடிப்பதைக் கண்டித்ததால் அத்தையை அடித்துக்கொன்ற சிறுவன் கைது

தேவாரம் அருகே குடிப்பதைக் கண்டித்த அத்தையை உருட்டு கட்டையால் அடித்து கொலை செய்த சிறுவனை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

குடிப்பதைக் கண்டித்ததால் அத்தையை அடித்துக்கொன்ற சிறுவன் கைது

Published On :1 பிப்ரவரி 2024, 4:13 pm IST

போடி: தேவாரம் அருகே குடிப்பதைக் கண்டித்த அத்தையை உருட்டு கட்டையால் அடித்து கொலை செய்த சிறுவனை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

தேவாரம் அருகேயுள்ள டி.மீனாட்சிபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் வெள்ளையன் மகள் அழகம்மாள் (65). இவரது தம்பி கணேசன் இறந்து விட்டார். கணேசனின் மனைவி கேரளத்துக்கு வேலைக்குச் சென்றுவிட்டார். அழகம்மாளுக்கு திருமணம் ஆகாததால் கணேசனின் இரண்டு மகன்களையும் அழகம்மாள்தான் வளர்த்து வந்தார். அழகம்மாள் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்த நிலையில் அவருடன் கணேசனின் மகன்களையும் ஆடு மேய்க்க அழைத்துச் செல்வது வழக்கம்.

இதில் இளைய மகன் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் மது அருந்தி வந்துள்ளார். இதனை தெரிந்து கொண்ட அழகம்மாள் சிறுவனைக் கண்டித்துள்ளார். மூத்த மகன்தான் அத்தையிடம் கூறியிருப்பார் என நினைத்த சிறுவன், தனது அண்ணன் மணிகண்டனுடன் தகராறு செய்துள்ளார். இதனை விலக்கிவிட்ட அழகம்மாள் மணிகண்டனை வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டார். இதனிடையே திங்கள்கிழமை இரவு வீட்டிற்கு வந்த சிறுவன் தூங்கிக் கொண்டிருந்த அழகம்மாளை உருட்டுக் கட்டையால் தலை, முகம் ஆகிய இடங்களில் சரமாரியாக தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதுகுறித்து மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் தேவாரம் காவல் நிலைய போலீஸார் சிறுவனைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மதுவுக்கு அடிமையாகி வளர்த்த அத்தையை அடித்துக் கொலை செய்த சம்பவம் தேவாரம் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.