மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வணிக பயன்பாட்டு எரிவாயு உருளை விலை ரூ.116 குறைந்தது

சென்னையில் 19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாட்டு எரிவாயு உருளை விலை ரூ.116 குறைந்து ரூ.1,893க்கு விற்பனை செய்யப்படுகிறது.

News image

கோப்புப் படம்

Updated On :1 நவம்பர் 2022, 2:58 am

DIN


சென்னை: சென்னையில் 19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாட்டு எரிவாயு உருளை விலை ரூ.116 குறைந்து ரூ.1,893க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த அக்டோபர் மாதத்தில் ரூ.2009க்கு விற்பனை செய்யப்பட்ட வணிக பயன்பாட்டு சமையல் எரிவாயு உருளை விலையை எண்ணெய் நிறுவனங்கள் தற்போது குறைத்திருப்பதால் உணவகம் நடத்துவோர் உள்ளிட்ட வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதேவேளையில், வீட்டு உபயோக எரிவாயு உருளை விலையில் மாற்றமின்றி ரூ.1,068க்கு விற்பனையாகிறது.

கச்சா எண்ணெய் விலை உயரும்போது சமையல் எரிவாயு உருளையின் விலை உயா்வது பொதுவானது. சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு உருளையின் விலையை மாற்றி அமைத்து வருகின்றன. 

இதன்படி, நவம்பர் மாதத்திற்கான எரிவாயு உருளையின் விலை இன்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.116 குறைக்கப்பட்டு, .ரூ.1,893க்கு விற்பனையாகிறது.

வீட்டு உபயோகத்துக்கான 14.2 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு உருளையின் விலை மாற்றமின்றி ரூ.1,068க்கு விற்பனையாகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.