வெள்ள நீர் தடுப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டதால் சென்னையில் 98% இயல்பு நிலை திரும்பி விட்டதாக அமைச்சர் சேரகர் பாபு தெரிவித்தார்.
சென்னையில் இன்று 200 வார்டுகளில் பருவ கால மருத்துவ முகாம் நடைபெறுகிறது. திருவிக நகர் மண்டலத்தில் இதனை தொடக்கிவைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு,
வெள்ள தடுப்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டதால் சென்னையில் 98% பகுதிகள் இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டன. மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் கழிவு நீரை அகற்றுவதோடு மருத்துவ முகாம்களை நடத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
அதனடிப்படையில் சென்னையில் இன்று பெருநகர மாநகராட்சியுடன் சுகாதாரத் துறையும் இணைந்து 200 வார்டுகளில் மழைக் கால மருத்துவ முகாமை நடத்துகிறது.
சென்னையில் 156 கி.மீ. தூரத்துக்கு மழைநீர் வடிகால் பணிகள் முடிந்துள்ளன, மீதியுள்ள 44 கிமீ தூரத்துக்கு பணிகள் முடிந்தால் அடுத்த ஆண்டு பருவ மழைக்கு பிரச்னை வராது.
பள்ளங்கள் உள்ள பகுதிகளில் சாலைகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பருவமழை முடிந்தவுடன் சாலைகள் அமைக்கும் பணி தொடங்கும்.
சென்னையில் நேற்று விபத்துக்குள்ளான பாழடைந்த கட்டடம் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. அதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
எங்களுடன் பேச ஈரானில் தலைவர்கள்தான் இல்லை: டிரம்ப்

இந்த முறை சவால்களை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்: அஜிங்க்யா ரஹானே
சமூக ஊடகங்களில் அரசியல் விளம்பரங்களுக்கு ஒப்புதல் அவசியம்: தேர்தல் ஆணையம் உத்தரவு

தென்காசியைத் தொடர்ந்து நெல்லை மாவட்டத்திற்கும் ஏப்ரல் 1 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

