
அதிமுகவும் திமுகவும் அண்ணன், தம்பி இயக்கம்தான் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் பேசியதாவது:
அதிமுக கூட்டணி அமைத்தால் சேரத் தயார் என்று டிடிவி தினகரன் கூறிய கருத்தை வரவேற்கிறேன். டிடிவியை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் சந்திப்பேன்.
வரும் 12ஆம் தேதி பிரதமர் மோடி தமிழ்நாடு வரும்போது வாய்ப்பு கிடைத்தால் அவரை நாங்கள் சந்திப்பேன்.
திமுகவும் அதிமுகவும் அண்ணன், தம்பி இயக்கம்தான். ஆனால், நாங்கள் மாறுபட்ட பாதையில் சென்று கொண்டிருக்கிறோம். எம்ஜிஆர் உருவாக்கிய பாதையில் நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கிறோம். திமுக அவர்களின் பாதையில் பயணிக்கிறார்கள்.
அதிமுகவை யாராலும் மிரட்ட முடியாது. அதிமுக தலைமையில் பிரச்னை இருக்கிறது என்ற தோற்றம் உருவாகியுள்ளது. அதிமுகவில் சில சில பிரச்னைகள் வரும், அது சரியாகிவிடும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.